ஆப்நகரம்

ஆப்கன் மீது அமெரிக்கா பயங்கர வெடிகுண்டு தாக்குதல்!! டிரம்ப் துவக்கினார் புதிய அத்தியாயம்!!

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பயங்கர சக்தி வாய்ந்த குண்டை வீசியதால் சர்வதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது

TOI Contributor 13 Apr 2017, 11:13 pm
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பயங்கர சக்தி வாய்ந்த குண்டை வீசியதால் சர்வதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது
Samayam Tamil us drops biggest non nuclear bomb in afghanistan reports afp quoting pentagon
ஆப்கன் மீது அமெரிக்கா பயங்கர வெடிகுண்டு தாக்குதல்!! டிரம்ப் துவக்கினார் புதிய அத்தியாயம்!!


அமெரிக்க அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கொள்கைகளிலும் மாற்றம் வரும் என்று ஏதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு ஆப்கானிஸ்தான் மீது பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.



ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் என்ற இடத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து 21,000 பவுண்ட் எடையுள்ள வெடிகுண்டுகளை அமெரிக்கா வீசியுள்ளது. பாகிஸ்தானை ஒட்டிய இந்த இடத்தில்தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து தங்கி, மேற்கத்திய நாடுகளின் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

அமெரிக்க தேர்தலில் அதிபராக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்புக்கு ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் ஆதரவு கொடுத்தார், அதனால்தான் டிரம்பால் வெற்றி பெற முடிந்தது என்று கூறப்பட்டது. அமெரிக்க எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. வெற்றி பெற்ற டிரம்புக்கு விளாமிடிர் புடின் வாழ்த்து தெரிவித்தார் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில், சிரியாவுக்கு ஆதரவாக போராடி வரும் ரஷ்யாவை கண்டுகொள்ளாமல், அமெரிக்காவின் முந்தைய அரசுகளின் கொள்கைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல், டிரம்ப் அரசும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியா மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு விடப்பட்ட சவாலாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விஷயத்திலும் முந்தைய அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் இல்லாமல், இன்று அதிரடியாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானை போட்டி போட்டுக் கொண்டு ரஷ்யாவும், அமெரிக்காவும் வளைக்கத் முயற்சித்தன. இதன் விளைவுதான் தலிபான் தீவிரவாதிகளும், அல் கொய்தா தீவிரவாதிகளும் வளரக் காரணம். பின்னர், மார்பில் பாய்ந்த வளர்த்த கடாவை, அடக்குவதற்கு அமெரிக்கா கடந்த 2001ல் தனது படைகளை அனுப்பியது. ஆட்சியைப் பிடித்த தலிபான்களை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு பிரிட்டன் போன்ற கூட்டணி நாடுகளுடன் இணைந்து போரிட்டு தனது படை வீரர்களை பெரிய அளவில் இழந்தது. ஒரு பக்கம் ரஷ்யாவை ஏதிர்த்துக் கொண்டே, அல் கொய்தா தீவிரவாதிகளையும், தலிபான்களையும் அமெரிக்கா தாக்கி வந்தது. தலிபான்களை ஆட்சியில் இருந்து நீக்கி ஜனநாயகத்தை துளிர்க்க வைக்கிறோம் என்று அமெரிக்கா கூறியது. அதை செய்தது. ஆனால், இன்று வரை அந்த நாட்டில் இந்த இரண்டு தீவிரவாதிகளின் ஆளுமைதான் அதிகமாக பார்க்கப்படுகிறது. அரசும் அஞ்சிக் கொண்டுதான் உள்ளது.

ஆனாலும், இதில் அமெரிக்கா முழு வெற்றியை பெற முடியவில்லை. இன்று உலகம் முழுவதும் தற்போது இந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னரும், அமைதி நிலவவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு நண்பனாக, பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் மீதான பாதிப்பு இந்தியாவையும் பாதிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

US drops biggest non-nuclear bomb in Afghanistan reports AFP quoting Pentagon

அடுத்த செய்தி