ஆப்நகரம்

5 - 11 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - அரசு அனுமதி!

சிறுவர், சிறுமிகளுக்கு, பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 30 Oct 2021, 5:53 pm
அமெரிக்காவில், 5 வயது முதல் 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு, பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil Vaccine For Teenagers


கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. சீனா, சிலி, கியூபா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் லீவு! - அதுவும் ஒரு வாரம்!
இந்நிலையில், அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரை உடைய சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டு உள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
4 வாரங்களுக்கு பிறகு ஷாருக் கான் மகன் சிறையிலிருந்து விடுவிப்பு!
இதைத் தொடர்ந்து 5 வயது முதல் 11 வயது வரை உடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு மட்டும் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்களுக்கு நபர் ஒருவருக்கு 10 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே தடுப்பு மருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த அளவானது, பெரியவர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பு மருந்தில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி