ஆப்நகரம்

வெளிநாட்டு நாய்களுக்கு தடை.. அரசு உத்தரவுக்கு காரணம் இதுதான்!

பல்வேறு நாடுகளில் இருந்து நாய்களை கொண்டுவர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

Samayam Tamil 15 Jun 2021, 11:13 pm

ஹைலைட்ஸ்:

  • ரேபிஸ் அபாயம் மிகுந்த 100 நாடுகள்
  • வெளிநாட்டு நாய்களை கொண்டுவர அமெரிக்கா தடை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Rabies
ரேபிஸ் நோய் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து நாய்களை கொண்டுவர அமெரிக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாய் வெறி நோயான ரேபிஸ் இன்னும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரச்சினையாக உள்ளது.
இந்த 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நாய்களை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே இந்த நாடுகளில் இருந்து எடுத்துவரப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுகிறது.

எனினும், தடுப்பூசி போடும் அளவுக்கு வளராக சில குட்டி நாய்கள் எடுத்துவரப்படுகின்றன. இந்த குட்டி நாய்களுக்கும் அமெரிக்காவுக்குள் அழைத்துவர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அண்மைக்காலமாக இதுபோல குட்டி நாய்கள் வருகை அதிகரித்துள்ளது.

ஊரடங்கை இப்போ தளர்த்த வேண்டாம்.. பிரதமர் திடீர் தடாலடி!
எனவே, ரேபிஸ் பாதிப்புள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நாய்களை எடுத்துவர அமெரிக்க அரசு தடை விதித்து அறிவித்துள்ளது. நேற்று முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இத்தடைக்கு அமெரிக்க கால்நடை மருத்துவ சங்கம் வரவேற்பளித்துள்ளது.

அடுத்த செய்தி