ஆப்நகரம்

அனைவருக்கும் கொரோனா மருந்து இலவசம்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

அனைவருக்கும் கொரோனா மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2020, 2:34 pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அக்டோபர் 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கொரோனாவில் இருந்து குணமடைந்த ட்ரம்ப் மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளார்.
Samayam Tamil Regeneron Covid-19 Drug


சிகிச்சையின்போது டொனால்ட் ட்ரம்புக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. மேலும், ரீஜெனரான் என்ற புதிய மருந்தும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ரீஜெனரான் மருந்து அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் எனவும், அதற்காக மக்கள் பணம் செலுத்த தேவையில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் சொல்லும் தடுப்பூசி வேண்டாம் : அடம்பிடிக்கும் கமலா

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் மருத்துவமனையில் நான்கு நாட்கள் இருந்தேன். ரீஜெனரான் மருந்தை பற்றி கேள்விப்பட்டேன். எதை எனக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். எனது பரிந்துரைப்படி அந்த மருந்தை எனக்கு கொடுத்தனர்.

அந்த மருந்து ஒரு அற்புதத்தை செய்திருக்கிறது. உடனடியாக நான் நலமாக உணர்ந்தேன். இந்த மருந்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதிபருக்கு கிடைத்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்த மருந்தை நாம் எல்லா மருத்துவமனைகளுக்கும் கொடுக்க போகிறோம்.

மருந்தை ராணுவம்தான் விநியோகிக்கப்போகிறது. இது முழுக்க முழுக்க இலவசம். இதற்காக நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. நமக்கு வெகு விரைவில் தடுப்பூசி கிடைக்கப்போகிறது. தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி