ஆப்நகரம்

டிவி, செல்போனில் மூழ்கிக் கிடக்கும் டிரம்ப்; 3 மாசத்துல 297 மணி நேரம் காலி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவி, செல்போனில் அதிகம் மூழ்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 5 Feb 2019, 4:13 pm
உலகின் மிகப்பெரிய வல்லரசாக கருதப்படும் நாடு அமெரிக்கா. இதன் அதிபர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவரின் அன்றாட பணிகள் குறித்த அட்டவணை மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். அமெரிக்காவின் தற்போதைய அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்ட் டிரம்ப்.
Samayam Tamil Trump


இவரது பணி அட்டவணை ஆனது, ஆக்ஸியோஸ் என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இது வெள்ளை மாளிகை அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிபரின் தனிச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலில் கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 3 மாதங்களின் பணி அட்டவணை இடம்பெற்றுள்ளது. அதன்படி, தினமும் காலை 11 மணிக்கு டிரம்ப் தனது அலுவலகப் பணிகளைத் தொடங்குகிறார்.

கடந்த 3 மாதங்களில் 60% நேரம் போனில் பேசுதல், செய்தித்தாள் வாசித்தால், டுவிட்டரில் பதிவிடல், தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றில் செலவிட்டுள்ளார். இதற்காக 3 மாதங்களில் மொத்தம் 297 மணி நேரம் 15 நிமிடங்கள் செலவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி