ஆப்நகரம்

கொரோனாவிலிருந்து மீண்ட ட்ரம்ப்: 20 வயது குறைந்ததாம்!

கொரோனாவிலிருந்து குணமாகி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்.

Samayam Tamil 6 Oct 2020, 5:54 am
கொரோனா பாரபட்சம் இல்லாமல் உலகம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. சர்வதேச தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
Samayam Tamil trump


இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானார். வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் "வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையிலிருந்து இன்று மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணி) டிஸ்சார்ஜ் ஆகிறேன்.

உ.பி.,யை சீர்குலைக்க இப்படியொரு சதி; பகீர் கிளப்பும் யோகி ஆதித்யநாத்!

நான் தற்போது நன்றாக உணருகிறேன். கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம். இந்த வைரஸ் உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். நாங்கள் இந்த வைரஸுக்கு சிறப்பான தடுப்பூசிகளையும், தகவல்களையும் உருவாக்கியுள்ளோம். நான் 20 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை விட நன்றாக உணருகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், “பாதுகாப்பான வாகனத்தில் சென்று மருத்துவமனைக்கு வெளியே நாட்கணக்கிலும், மணிக்கணக்கிலும் நின்றுகொண்டிருந்த எனது ஆதரவாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கச்சென்றதால் சில ஊடகங்கள் வருத்தமாக உள்ளது என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நான் இவ்வாறு செய்யவில்லை என்றால் ஊடகங்கள் என்னை முரட்டுத்தனமானவன் என கூறும்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இங்க கொரோனாவே இல்ல; தளர்வுகளை அறிவித்த நியூசிலாந்து அரசு!

இதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி அவர் காலை 5 மணிக்கு வெள்ளை மாளிகை திரும்பினார். தனி ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகை சென்றார்.

அடுத்த செய்தி