ஆப்நகரம்

White House Shot: காதில் ரகசியம் சொன்ன காவலர்; பாதியில் ஓட்டம் பிடித்த அமெரிக்க அதிபர் - என்ன நடந்தது?

செய்தியாளர்கள் சந்திப்பின் போது காவலர் சொன்ன ரகசிய விஷயத்தைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.

Samayam Tamil 11 Aug 2020, 7:55 am
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழக்கம் போல் நேற்று பிற்பகல் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். இந்த சூழலில் அதிபரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்து, ட்ரம்பின் காதில் ஏதோ கூறினார். அதற்கு, “அப்படியா, என்ன ஆச்சு” என்று கேள்வி எழுப்பிய படியே செய்தியாளர்கள் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பினார். சிறிது நேரத்திற்கு பின் திரும்பிய அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
Samayam Tamil Donald Trump


மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நடமாடியுள்ளார். இதைக் கவனித்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரைக் கைது செய்தனர். படுகாயமடைந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓவல் அலுவலகத்திற்கு என்னைப் பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகக் கூறினார்.

அவ்வளவு தான் எல்லாம் முடியப் போகுது - டிக்டாக்கிற்கு செம ஷாக் கொடுத்த ட்ரம்ப்!

இந்த சம்பவத்தால் நீங்கள் பயந்துவிட்டீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் அப்படி தெரிகிறதா என்று ட்ரம்ப் கிண்டலாக பதிலளித்தார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பென்சில்வேனியா அவென்யூவில் 17வது தெருவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இது வெள்ளை மாளிகையில் இருந்து வெகு அருகில் தான் இருக்கிறது.

100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு... தொற்றை கையாண்டது எப்படி?

ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் விபரீத செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, தடுப்பு நடவடிக்கையாக துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த சூழலில் காயமடைந்த நபரின் நிலை குறித்து முழு விவரம் வெளியாகவில்லை. இதற்கிடையில் தக்க சமயத்தில் தன்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற ரகசிய சேவை அதிகாரிகளை ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

அடுத்த செய்தி