ஆப்நகரம்

அதிபர் தேர்தல்லயா தலையிடுற? ரஷ்யாவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்...!

ரஷ்யா மீதான பொருளாதார தடை குறித்த ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

TNN 3 Aug 2017, 5:55 pm
வாஷிங்டன்: ரஷ்யா மீதான பொருளாதார தடை குறித்த ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
Samayam Tamil us president trump signs russia economic ban
அதிபர் தேர்தல்லயா தலையிடுற? ரஷ்யாவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்...!


கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையினர் மறைமுகமாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று, டிரம்ப் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அதிபர் தேர்தல் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு டிரம்ப் ஒப்புதல் அளிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவர் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, இனி ரஷ்யாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடைகள் வர்த்தகப் போரை குறிக்கிறது. அதன்மூலம் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

US President Trump signs Russia economic ban.

அடுத்த செய்தி