ஆப்நகரம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: வடகொரியாவின் சூழ்ச்சியை கண்டுபிடித்த அமெரிக்கா

கண்டம் விட்டு கண்டம் ஏவுகணைகளை வடகொரியா புதுப்பிப்பதை செயற்கைகோள் படங்கள் மூலம் அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.

Samayam Tamil 31 Jul 2018, 5:43 pm
கண்டம் விட்டு கண்டம் ஏவுகணைகளை வடகொரியா புதுப்பிப்பதை செயற்கைகோள் படங்கள் மூலம் அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.
Samayam Tamil north korea missile


சமீபத்தில் அமெரிக்கா உளவுத்துறை வடகொரியாவின் சனும்படாங்க் தொழிற்சாலையின் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்தது. அதில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா புதுப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பெயர் வெளியிடப்படாத உளவுத்துறை அதிகாரி ஒருவர் பேசிய போது, வடகொரியா புதுப்பிக்கும் இந்த ஏவுகணையானது அமெரிக்காவை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டதாகவும், திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளை ஆராய்ச்சி மையத்தில் வைத்து புதுப்பிப்பதாகவும் தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த செய்தி