ஆப்நகரம்

ஒன்னு போனா ஒன்னு வருது... 2018ல் வருகிறது புதிய ஆபத்து

வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் பயங்கர சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 20 Nov 2017, 10:01 pm
நியூயார்க் : வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் பயங்கர சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil us scientists predict more big earthquakes in 2018
ஒன்னு போனா ஒன்னு வருது... 2018ல் வருகிறது புதிய ஆபத்து


புவியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருவதால் நிலநடுக்கம் ஏறுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் பில்ஹம் மற்றும் மோண்டானா பல்கலைக்கழகத்த்டின் ரெபிக்கா பெண்டிக் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் அறிக்கையில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், நிலநடுக்கம் 7 என்ற ரிக்டர் அளவில் ஆண்டுக்கு 15-20 முறை ஏற்படும் . ஆனால் தற்போது புவியின் சுழற்சி வேகம் சில மில்லி செகண்ட் குறைந்துள்ளதால், 2018ல் 25-30 முறை பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு நிலநடுக்கங்கள் ஏற்படும்.

அடுத்த 5 ஆண்டில் மேலும் சுழற்சி வேகம் குறைந்து பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். புவியின் சுழற்சி வேகம் குறித்த ஆய்வு தொடங்கிவிட்டது. அப்போது முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவல் தான் கிடைப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி