ஆப்நகரம்

அமெரிக்கா விசா வேண்டுமா? அப்போ உங்க பேஸ்புக் குறித்த தகவலையும் கொடுங்க..!

இனி அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட சில விண்ணப்பத்தாரர்களின்,அவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் இ மெயில் கணக்குகள் ஆகியவை குறித்து குறிப்பிட வேண்டும் என கணக்குகள் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

TNN 5 May 2017, 5:55 pm
இனி அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட சில விண்ணப்பத்தாரர்களின்,அவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் இ மெயில் கணக்குகள் ஆகியவை குறித்து குறிப்பிட வேண்டும் என கணக்குகள் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil us to seek social media details from certain visa applicants
அமெரிக்கா விசா வேண்டுமா? அப்போ உங்க பேஸ்புக் குறித்த தகவலையும் கொடுங்க..!

கடந்த வியாழக்கிழமை அமெரிக்க குடியேற்றத்துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்த புதிய முறை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக, வரும் மே 18-ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக இந்த புதிய விதி, அடுத்த 180 நாட்களுக்கு அமெரிக்காவில் அமல்படுத்தப்பட உள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு செல்வதற்காக விசா விண்ணப்பிப்பவர்கள், இனி தங்கள் விண்ணப்பத்தோடு மேற்கண்ட விபரங்களையும் இணைக்க வேண்டி இருக்கும். இந்த புதிய விதியினால் அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிப்பவர்களில் சுமார் 65,000 பேர் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிக்கப்படும் விண்ணப்பதாரர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்திய சமூக வலைத்தள கணக்குகள், இ மெயில் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை குறித்து தெரிவிக்க வேண்டும். இந்த கணக்குகளின் கடவுச்சொற்கள் கேட்கப்படாது எனவும் அவற்றை தவறாக பயன்படுத்த முயற்சிகள் நடக்காது எனவும் குடியேற்றத்துறையினால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், இந்த விண்ணப்பதாரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் மேற்கொண்ட இடங்கள் குறித்த விபரங்கள்,வேலை குறித்த தகவல்கள், உடன் பிறந்தவர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை அளிக்க வேண்டி இருக்கும்.

US to seek social media details from certain visa applicants

அடுத்த செய்தி