ஆப்நகரம்

“உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்” : அகதிகளுக்கு டிரம்ப் சவால்!

“உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்” : அகதிகளுக்கு டிரம்ப் சவால்!

TOI Contributor 11 Feb 2017, 9:00 am
ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்ட டிரம்ப்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது.
Samayam Tamil visa ban may go to supreme court as appeals court rules against trump
“உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்” : அகதிகளுக்கு டிரம்ப் சவால்!


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் ஈராக், சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு 6 மாதங்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தடை விதித்தனர்.

மீண்டும் டிரம்ப் சார்பில் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மூவரும் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பையடுத்து ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் விசா எடுத்துக்கொண்டு அமெரிக்கா வரலாம் என்றும், அகதிகளுக்கும் அனுமதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்புக்கு பின்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளார்.

SEE YOU IN COURT, THE SECURITY OF OUR NATION IS AT STAKE! — Donald J. Trump (@realDonaldTrump) February 9, 2017

அடுத்த செய்தி