ஆப்நகரம்

பயங்கரவாதி ஹீபிஸ் சயீத் விடுதலை; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மும்பை தாக்குதலில் முக்கிய பயங்கரவாதியாக குற்றம் சாட்டப்பட்ட ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் விடுதலை செய்ததற்கு, அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNN 26 Nov 2017, 7:53 pm
மும்பை தாக்குதலில் முக்கிய பயங்கரவாதியாக குற்றம் சாட்டப்பட்ட ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் விடுதலை செய்ததற்கு, அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil white house condemns release hafiz saeed pakistan
பயங்கரவாதி ஹீபிஸ் சயீத் விடுதலை; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

2008ஆம் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அரசு, அவரை வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்தது..

விடுதலை பெற்றதும் செய்தியாளர்களைச் சந்தித்த ஹபீஸ் சயீத், காஷ்மீர் விடுதலைக்காக மக்களின் ஆதரவைத் திரட்டிப் போராடப்போவதாக தெரிவித்துள்ளார். இதனை கண்டித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் ஹபீஸ் விடுவிப்பு தீவிரவாதத்தின் மறு அறைகூவல் என்று விமர்சித்தது.

இந்நிலையில், ஹபீஸ் சயீத்தின் விடுதலைக்கு அமெரிக்காவும் கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இது குறித்து கிடைத்த செய்திகளின் படி, ஹபீஸ் சயித்தை விடுவித்தால், உலக நாடுகளின் மத்தியில் பாகிஸ்தான் தனது நற்பெயரை கெடுத்துக் கொள்ளும் என்றும், தொடர்ந்து பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி