ஆப்நகரம்

சீனாவை வெளுக்க இந்தியாவுக்கு ஆயுதம் கொடுத்தோம்: அமெரிக்கா பகீர் தகவல்!

சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியாவுக்கு ஆயுதம் வழங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Dec 2020, 4:49 pm

இந்தியா-சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இருதரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை முன்னேற்றமில்லை. இதுபோக, எல்லைப் பிரச்சினையை தூண்டியது யார் என்பதில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Samayam Tamil Trump - Modi


இந்நிலையில், சீனாவின் முரட்டுத்தனத்தை எதிர்த்து இந்தியாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். பெயர் கூற விரும்பாத வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “உலகம் முழுவதுமே சீனாவின் முரட்டுத்தனம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது.

கைலாசாவுக்கு இலவச விசா கொடுக்கும் நித்தி: உஷார் மக்களே!

ஹாங் காங், தைவான், தென் சீனக் கடல், இந்தியா-சீனா எல்லை என பல்வேறு இடங்களில் சீனா பிரச்சினை செய்து வருகிறது. கடந்த ஆறு-ஏழு மாதங்களாக எல்லையில் சீனாவின் கெடுபிடிகளை சந்தித்தபோது இந்தியாவுக்கு பக்கபலமாக அமெரிக்கா துணை நின்றது.

இந்தியாவுக்கு தேவையான உபகரணங்களை அமெரிக்கா வழங்கியது. இந்தியாவுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டோம். சீனாவை எதிர்கொள்வதற்கும், அமைதியான தீர்வு காண்பதற்கும் இந்தியாவுக்கு நாங்கள் தார்மீக ஆதரவை வழங்கினோம்.

ராஜேஷ் படத்தின் அடுத்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ்

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் கீழ் இந்தியாவுக்கு அதிகப்படியான ஆயுதங்களை விநியோகித்த இரண்டாம் நாடு அமெரிக்காதான். 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு ஆயுதங்களே விற்பனை செய்யவில்லை. இப்போது 2000 கோடி டாலருக்கு ஆயுத விற்பனை செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி