ஆப்நகரம்

மலேரியா இல்லாத நாடு இலங்கை

இலங்கையை மலேரியா இல்லா நாடாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

TOI Contributor 5 Sep 2016, 6:13 pm
கொழும்பு : இலங்கையை மலேரியா இல்லா நாடாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil who certifies sri lanka malaria free
மலேரியா இல்லாத நாடு இலங்கை


வடகிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியா இல்லாத 2வது நாடு இலங்கை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மாலத்தீவை மலேரியா இல்லாத நாடாக அறிவித்திருந்தது.
இந்தியாவை விட நான்கு மடங்கு அதிக மழை பெய்யும் நாடு இலங்கை. ஆனால் கடந்த வாரம் பெய்த மழையால் இந்தியாவில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கைக்கு மலேரியா இல்லா நாடு என்ற அங்கீகாரத்தை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மலேரியாவால் ஏறக்குறைய ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
60 ஆண்டுகளுக்கு முன் மலேரியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நாடு இலங்கை. கடந்த 3.5 ஆண்டுகளில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொசு ஒழிப்பு மற்றும் மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சி இலங்கையை மலேரியா இல்லா நாடாக ஆக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி