ஆப்நகரம்

கொரோனா பிறந்தது எங்கே? சீனாவுக்கு பறக்கும் WHO விசாரணை குழு!

கொரோனா குறித்து ஆய்வு செய்வதற்காக வூகானுக்கு செல்ல உலக சுகாதார மையத்தின் நிபுணர் குழு தயாராகியுள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 6:44 pm
கொரோனா வைரஸ் உலக மக்களை ஓரு ஆண்டுக்கும் மேலாக படாய் படுத்திவிட்டது. கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கியது.
Samayam Tamil Wuhan


வூகானில் உள்ள மார்க்கெட்டில் கொரோனா பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக உலகம் முழுக்க பரவிவிட்டது. எனினும், கொரோனா சீனாவில் உருவாகவில்லை என அந்நாட்டின் தராப்பில் தொடர்ந்து வாதிடப்படுகிறது.

கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு!
கொரோனா உருவானதன் மூலம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார மையம் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, உலக சுகாதார மையத்தின் நிபுணர் குழு ஜனவரி 14ஆம் தேதியன்று நேரடியாக வூகானுக்கு சென்றிருக்கும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இக்குழுவில் மொத்தம் 10 ஆய்வாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சிங்கப்பூரில் இருந்து நேரடியாக வூகானுக்கு செல்லவிருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாடுகளால், இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியை இழந்தாரா ட்ரம்ப்? அதிகாரபூர்வ இணையதளத்தில் அதிர்ச்சி தகவல்!
நிபுணர் குழுவின் விசாரணை கடந்த வாரமே தொடங்கவிருந்தது. சீனா அனுமதியளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் திட்டம் தள்ளிப்போனது. யாரையும் குறை கூறுவதற்காக இந்த விசாரணை நடைபெறவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி