ஆப்நகரம்

ஐந்து வயது மகளை பல நாட்கள் பட்டினிப்போட்டு கொன்ற தாய்

ஜப்பானில் பெற்ற மகளை சரியாக உணவு கொடுக்காமல், பட்டினி போட்டு கொன்ற பெண் மற்றும் அவரது கணவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 7 Jun 2018, 2:18 pm
ஜப்பானில் பெற்ற மகளை சரியாக உணவு கொடுக்காமல், பட்டினி போட்டு கொன்ற பெண் மற்றும் அவரது கணவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil japan-mom-cover-image
பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்ற தாய்


அந்நாட்டின் கங்கவா மாகாணத்தை சேர்ந்த யூரி என்ற 25 வயது பெண் காதலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில வருடங்களில் யூரி காதலனை பிரிந்து தனியே சென்றார்.

சில வருடங்களுக்கு பிறகு புனாட்டோ (33) என்ற வாலிபரை காதலித்து கரம் பிடித்தார். இந்நிலையில் தனக்கு பிரிந்த பெண் குழந்தையுடன் புனோட்டோ உடன் யூரி வாழத் தொடங்கினார்.

இந்நிலையில் குழந்தை யுவா மீது யூரிக்கு வெறுப்பு உண்டாக தொடங்கியது. அவரது கணவர் புனாட்டாவிற்கு குழந்தையை கண்டால் பிடிக்கவில்லை. இருவரும் சேர்ந்து யுவாவை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.

யுவாவிற்கு ஐந்து வயது ஆன நிலையில், யூரி அவளது கணவர் புனாட்டோவின் கொடுமை எல்லை மீறிச்சென்றது. இருவரும் சேர்ந்த அந்த குழந்தையை பட்டினிப்போட்டனர்.

உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாததால் யுவாவால் எதுவும் செய்யமுடியவில்லை. இந்நிலையில் வீட்டில் அந்த குழந்தை மயங்கி கீழே விழுந்துவிட்டது. இதயத்துடிப்பும் இல்லை.

இதைப்பார்த்த புனாட்டோ, காவல்துறையை தொடர்ப்புக்கொண்டு தனது மகள் மயங்கி கிடப்பதாகவும், இதயத்துடிப்பு இல்லை என்றும் கூறினார்.

போலீசாரும் அவர்களது வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்தனர். யுவா இறந்து கிடந்தாள். மிகவும் மெலிதாக காணப்பட்ட அந்த குழந்தை வெறும் 12 கிலோ தான் இருந்தது.

மேலும் குழந்தை யுவாவின் நோட்டு புத்தகங்களை பார்த்தனர். அதில் யுவா தனது தாயும், வளர்ப்பு தந்தையும் தினமும் கொடுமைப்படுத்துவதாக எழுதியிருந்தாள். இதை கண்டு கோபமடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

5 வயது குழந்தை சராசரியாக 20 கிலோ இருக்க வேண்டும், இதனால் சந்தேகமடைந்த போலீசார் யூரி மற்றும் புனாட்டோவிடம் தீவிர விசாரணை நடத்ததொடங்கினர். அதில் அவர்கள் இருவருமே குழந்தை யுவாவிற்கு உணவு வழங்காமல் பல பட்டினி போட்டு கொன்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜப்பானின் கங்கவா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி