ஆப்நகரம்

காதலை எதிர்த்ததால் தோழிக்கு சயனைட் கொடுத்த பெண்..!

தான் காதலித்து வரும் நபரின் நடத்தை சரியில்லை என கூறிய தோழியை ஓராண்டுக்கு பிறகு சயனைட் கொடுத்து கொலை செய்துள்ளார் இளம்பெண் ஒருவர் .

TNN 10 Aug 2016, 12:15 pm
தான் காதலித்து வரும் நபரின் நடத்தை சரியில்லை என கூறிய தோழியை ஓராண்டுக்கு பிறகு சயனைட் கொடுத்து கொலை செய்துள்ளார் இளம்பெண் ஒருவர் .
Samayam Tamil woman poisoned her friend with cyanide
காதலை எதிர்த்ததால் தோழிக்கு சயனைட் கொடுத்த பெண்..!



இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த மிர்னா சலிகின் மற்றும் ஜெசிகா வாங்கோ ஆகியோர் கடந்த ஏழு ஆண்டுகளாக மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர்.இந்நிலையில் ஜெசிகோ காதலில் விழுந்துள்ளார்.ஆனால் கடந்தாண்டு ஜெசிகா காதலிக்கும் நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்,எனவே தனது காதலை ஜெசிகா நிறுத்திக் கொள்ள வேண்டும் என மிர்னா கடந்தாண்டு வலியுறுத்தியுள்ளார்.இதற்கு ஜெசிகா மறுப்பு தெரிவித்ததால்,அவருடனான நட்பை மிர்னா முறித்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒராண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் மிர்னாவுடன் நட்பை புதுப்பித்துக் கொண்ட ஜெசிகா,அவரை உணவு விடுதி ஒன்றுக்கு சாப்பிட அழைத்துள்ளார்.அங்கு மற்றொரு பெண்ணுடன் வந்திருந்த ஜெசிகா,மிர்னாவுக்கு காபி அளித்துள்ளார்.காபியை ஒரு மடக்கு குடித்த மிர்னா,காபியின் சுவையில் ஏதோ மாறுதல் தெரிவதாக கூறு மேற்கொண்டு குடிக்க மறுத்துவிட்டார்.ஆனால் சில நிமிடங்களில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து மிர்னா மரணமடைந்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போதுதான்,தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மிர்னாவை பழி வாங்குவதற்காக ஜெசிகா காபியில் சயனைட் கலந்து கொடுத்திருப்பது தெரிய வந்தது.இதற்கு ஜெசிகாவுடன் இருந்த மற்றொரு பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார்.


ஏற்கனவே காதல் முறிவை சந்தித்த ஜெசிகா,அப்போது முதல் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.தனது முன்னாள் காதலனின் காரை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல்,குடி போதையில் கார் ஓட்டியதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.


ஜெசிகா ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் குறித்த சில ஆவணங்களை இந்தோனேசிய காவல்துறையிடம் ஆஸ்திரேலிய காவல்துறையினர் சமர்பித்துள்ளனர்.இதில் ஜெசிகா மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை தண்டிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் இந்தோனேஷிய காவல் துறையினர் குழம்பி போய் உள்ளனர்.

அடுத்த செய்தி