ஆப்நகரம்

எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் டேங்கை தேடிய பெண்; வயிறு குலுங்க சிரிக்க வைத்த வைரல் வீடியோ!

வாஷிங்டன்: பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் டேங்கை தேடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 19 Dec 2018, 2:19 am
அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. இது தானாக இயங்கக்கூடிய வகையிலான தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.
Samayam Tamil Tesla Car


இதனைப் பயன்படுத்த அமெரிக்காவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் பெண் ஒருவர் எலக்ட்ரிக் டெஸ்லா காரை ஓட்டிச் சென்று நகைப்புக்கு ஆளான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, அவர் பெட்ரோல் பங்கில் தனது எலக்ட்ரிக் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் காரில் பெட்ரோல் டேங்க் எங்கிருக்கிறது எனத் தேடியுள்ளார். அந்த பங்கில் வாடிக்கையாளர்கள் தாமாகவே எரிபொருள் நிரப்பிச் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஊழியர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் நீண்ட நேரமாக காருக்கு உள்ளேயும், வெளியேயும் பெட்ரோல் டேங்கை தேடியுள்ளார். இதனை பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது அப்பெண்ணின் நடவடிக்கையைக் கண்டு சிரித்தபடியே இருந்துள்ளனர். சுமார் 2.5 நிமிடங்களுக்கு பிறகு, பின்னால் இருந்த காரில் சென்ற நபர் ஒருவர் வெளியே வந்து, நீங்கள் ஓட்டி வந்தது எலக்ட்ரிக் கார் என்று புரிய வைக்கிறார்.

இதையடுத்து தனது முட்டாள்தனத்தை எண்ணி அப்பெண் சிரித்துள்ளார். அப்போது, இது தன்னுடைய கார் அல்ல என்றும், நண்பருடைய கார் என்றும் கூறி ஒருவழியாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

அடுத்த செய்தி