ஆப்நகரம்

பத்தில் ஒருவருக்கு கொரோனா : குண்டை தூக்கி போட்ட WHO

உலகளவில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2020, 6:52 pm

கடந்த சுமார் பத்து மாதங்களாக கொரோனா வைரஸ் மனித குலத்தையே பெரும் தொந்தரவுக்குள்ளாக்கியுள்ளது. சுகாதார சீர்கேடுகள், நோய் தொற்று, மரணங்கள், பண நெருக்கடி, பொருளாதார சரிவு என கொரோனாவால் ஏற்பட்ட சேதம் மிக அதிகம்.
Samayam Tamil Covid-19 test result


எவ்வளவோ முயற்சிகளை எடுத்தபிறகும் கொரோனா பாதிப்பும், உயிர்பலிகளும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இனி 30 நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிச்சிடலாம்!

உலகம் முழுவதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக 3.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உலக சுகாதார மையம் சொல்லும் கணக்கின்படி பார்த்தால் உலகளவில் ஏறக்குறைய 80 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும்.

இதுகுறித்து உலக சுகாதார்ர மையத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைமை இயக்குநர் மைக் ரயன் பேசியபோது, “உலகளவில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும். இது ஒவ்வொரு நாடுக்கும் ஏற்ப மாறக்கூடும். அதேபோல நகரப்புறங்களை காட்டிலும் கிராமங்களில் மாறக்கூடும்.

எப்படியிருந்தாலும், உலகின் பெரும்பாலான மக்கள் கொரோனா அபாயத்தில் இருக்கிறார்கள் என்பதே எங்களது கருத்து. கொரோனா கொள்ளை நோய் தொடர்ந்து நீடிக்கத்தான் போகிறடு என்பது நமக்கு தெரியும். எனினும், நம்மிடம் இருக்கும் வழிமுறைகளையும் கருவிகளையும் பயன்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தி உயிர்களை காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி