டோக்கியோ: உலகின் மிக மூத்த நபர் ஜப்பானில் காலமானார்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபி தஜிமா, கடந்த 4-8-1900ல் பிறந்தார். 19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு இருந்த ஒரே நபராக கருதப்பட்டவர்.
இவருக்கு மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் என 160 வாரிசுகள் உள்ளனர். ஜப்பானின் கிக்காய் நகரில் வாழ்ந்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.
ஜனவரி மாதம் முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதனை அவரது குடும்பத்தார் உறுதி செய்தனர்.
நபி தஜிமா, உலகின் மிக மூத்த நபர் என்ற சாதனையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
World oldest person Nabi Tajima dies in Japan.