ஆப்நகரம்

குதிரை கால் தடம் வடிவில் இரண்டாவது கண்ணாடி பாலத்தை கட்டிய சீனா..!!

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ஃப்யூஸி மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குதிரை கால் தடம் வடிவிலான வட்டவடிவ கண்ணாடி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இது இந்த நாட்டின் இரண்டாவது கண்ணாடி பாலமாகும்.

Samayam Tamil 22 Jun 2018, 4:14 pm
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ஃப்யூஸி மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குதிரை கால் தடம் வடிவிலான வட்டவடிவ கண்ணாடி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இது இந்த நாட்டின் இரண்டாவது கண்ணாடி பாலமாகும்.
Samayam Tamil 4D2B033400000578-5838443-image-a-16_1528879943292
சீனாவின் வட்டவடிவிலான புதிய கண்ணாடி பாலம் பயன்பாட்டிற்கு வந்தது


சுற்றுலாத்துறையை மேப்படுத்த சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2016ம் ஆண்டில் ஜான்ஜாயிஜி என்ற மலைப்பகுதியில் 14 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி பாலம் ஒன்ன்றை முதன்முதலாக கட்டியது சீனா.


இரண்டு மலைகளுக்கு நடுவில் கட்டப்பட்ட இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்வது என்பது அதீத திகிலூட்டும் அனுபவமாக இருக்கும். குறிப்பாக உயரமான பகுதிகளை கண்டு அஞ்சுபவர்களுக்கு இதில் நடப்பதே பெரிய சவால் தான்.

உலகளவில் ஜான்ஜாயிஜி கண்ணாடி பாலத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை உணர்ந்த சீன அரசு, நாட்டின் இரண்டாவது கண்ணாடி பாலத்தை ஃப்யூஸி மலை மீது தற்போது கட்டியுள்ளது.

8 மாத காலமாக இதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ’ஃப்யூஸி கண்ணாடி பாலம்’ கடந்த 16ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.


முற்றிலும் கண்ணாடியிலான இந்த பாலம், குதிரையின் கால் தடம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம்
360 டிகிரி சுற்றளவில், ஃப்யூஸி மலையின் ஓரத்திலிருந்து 30 அடி தூரம் வரை கட்டப்பட்டுள்ளது.

’ஸ்கைவாக்’ என்ற குறிப்பிடப்படும் இந்த கண்ணாடி பாலம், உலக அதிசியங்களில் ஒன்றான அமெரிக்காவின் ’கொலரடோ கிராண்டு கேன்யோன்’ கண்ணாடி பாலத்தை விட கூடுதலாக 7 மீட்டர் நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி