ஆப்நகரம்

மீண்டும் முழு ஊரடங்கு? - சீனாவில் அதிகரிக்கும் கொரோனாவால் அச்சம்!

சீனாவின் வூகான் நகரில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது கவலை அடையச் செய்துள்ளது

Samayam Tamil 3 Aug 2021, 4:34 pm

ஹைலைட்ஸ்:

  • வூகான் நகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
  • வூகானில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Lockdown1
சீனாவின் வூகான் நகரில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதை அடுத்து, அங்குள்ள மொத்த மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில் தான், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், முதன் முதலாக, கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரசில், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவியது.

ஒரு வழியாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்தந்த நாடுகள் மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு வகைகளில் மரபணு மாற்றமடைந்து பரவி வருகிறது.
நாடாளுமன்றத்தை அவமதித்த எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவிய, வூகான் மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இதனால், அங்குள்ள மொத்த குடியிருப்புவாசிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது.

வூகானில் உள்ள மொத்த குடியிருப்புவாசிகளுக்கும் அதாவது 1.1 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை வூகானின் மூத்த அதிகாரி லீ உறுதி செய்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு கூறி வந்த நிலையில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.
ஆன்லைன் ரம்மிக்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி