ஆப்நகரம்

எங்க தல உயிரோட தான் இருக்காரு ... அடித்துச் சொல்லும் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள்!!

இளம் பாப் இசைப் பாடகரை பார்த்து, இவர்தான் மைக்கேல் ஜாக்சன் என அவரது ரசிகர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Dec 2019, 5:37 pm
மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ளவருக்கு மரபணு பரிசோதனை (டிஎன்ஏ) செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Samayam Tamil எங்க தல உயிரோட தான் இருக்காரு ... அடித்துச் சொல்லும் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள்!!


பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன், 2009 ஆம் ஆண்டு இறந்தார். இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த, இளம் பாப் இசைக் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸின் உருவம், அச்சு அசலாக மைக்கேல் ஜாக்சனின் உருவமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து வியந்த மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள், செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும், அவர் மறைந்து வாழ்வதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

மீன் பிடித்துத் தின்னும் சிறுத்தைப் புலிகள் கண்டுபிடிப்பு

செர்ஜியோ கோர்டெஸ், தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து செர்ஜியோ கோர்டெஸ் கூறும்போது, "பத்திரிகையாளர் ஒருவர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாக கூறினார். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப் -அப் போட்டு அவரது பத்திரிக்கையில் எனது புகைப்படத்தை வெளியிட்டார்.

அதன்பின் அவர் என்னை சில சுவிஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவையெல்லாம் என் வாழ்வில் தற்செயலாக நடைபெற்ற நிகழ்வுகள்" என, அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி