ஆப்நகரம்

ஆசியாவிலும் பரவும் ஜிகா வைரஸ்!

ஆசியாவிலும் ஜிகா வைரஸ் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

TOI Contributor 11 Oct 2016, 8:43 am
மனிலா: ஆசியாவிலும் ஜிகா வைரஸ் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Samayam Tamil zika likely to spread in asia pacific who
ஆசியாவிலும் பரவும் ஜிகா வைரஸ்!


உலகையே அச்சுரித்து வரும் ஜிகா வைரஸ் இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகிறது. இதில் சிங்கப்பூர்,தாய்லாந்து உள்ளிட்ட 19 நாடுகளும் அடங்கும். தவிர இந்த வைரஸ் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆசிய பசுபிக் நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.,) எச்சரித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில், 400 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டடுள்ளதாகவும். வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டபிள்யு.எச்.ஓ., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டபிள்யு.எச்.ஓ., இயக்குனர் மார்ஜ்கிரெட் சான் கூறுகையில்,’ ஜிகா வைரஸின் தாக்கம் தற்போது ஆசிய பசுபிக் நாடுகளிலும் அதிகமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஆனால் எதிர்பாராதவிதமாக விஞ்ஞானிகள் இதற்கு தற்போது வரை எந்த தீர்வும் அளிக்கவில்லை. கூடிய விரைவில் இது ஒரு முடிவுக்கு வரும் என நம்புவோம்,’ என்றார்.

அடுத்த செய்தி