ஆப்நகரம்

ஸ்ரீபெரும்புதூரில் ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்து; விடிய விடிய மின்தடையால் பொதுமக்கள் அவதி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட ராட்சத விளம்பர பேனர், திடீரென அடித்த சூறைக்காற்றில் கீழே விழுந்ததில் மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 17 May 2023, 1:55 pm

ஹைலைட்ஸ்:

  • ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட ராட்சத விளம்பர பேனர்
  • காஞ்சிபுரத்தில் அடித்த சூறைக்காற்றில் ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்து
  • மின்கம்பம் உடைந்து சேதமடைந்ததால் இரவு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி
  • விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஸ்ரீபெரும்புதூரில் ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட ராட்சத விளம்பர பேனர், திடீரென அடித்த சூறைக்காற்றில் கீழே விழுந்ததில் மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்து:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்ட ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டதில் விடிய விடிய ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
40 அடி உயரத்தில் ராட்சத அளவிலான தனியார் விளம்பர பேனர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (50). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ராட்சத அளவிலான விளம்பர பேனரை அமைக்க நிலத்தை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சுமார் 40 அடி உயரத்தில் ராட்சத அளவிலான தனியார் விளம்பர பேனரை பொருத்தியுள்ளார்.


சூறைக்காற்றில் அடியோடு சரிந்து விழுந்த விளம்பர பேனர்:

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. அப்போது வீசிய காற்றில் உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் அடியோடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு:

இந்த விபத்தில் அருகில் இருந்த மின்கம்பங்கள் உடைந்து மின் ஒயர்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளதால் கீழ் படப்பை, மணிவாக்கம், அதனூர் உள்ளிட்ட அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் தடைபட்டது. மேலும் பலத்த காற்றின் காரணமாக முன்கூட்டியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின்கம்பம் உடைந்து சேதமடைந்ததால் இரவு முழுவதும் மின் துண்டிப்பு:

மின்கம்பம் உடைந்து சேதமடைந்ததால் இரவு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத விளம்பர பேனரை அகற்றி மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே வண்டலூர் வாலாஜாபாத் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உரிய அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி - சபரீசன் ரகசிய தொடர்பு.. என்ன நடக்கிறது அதிமுகவில்? - உண்மையை உடைத்த வைத்திலிங்கம்!

மேலும் ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலியை ஒட்டி வழிநெடுக்கிலும் உரிய அனுமதியின்றி பத்துக்கும் மேற்பட்ட ராட்சத அளவிலான விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாகன ஓட்டைகளின் கவனம் சிதறி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக வி.ஆர்.பி சத்திரம் பகுதியில் சாலையோரம் விதிகளை மீறி அமைக்கப்பட்ட ராட்சத அளவிலான தனியார் விளம்பரம் பேனர்கள் கிழிந்து ஆங்காங்கே தொங்கிய நிலையில் காட்சியளித்து வருகிறது.

மேலும் உயர் அழுத்த மின் கம்பிகளில் பேனர்கள் துண்டு துண்டாக கிழிந்து தொங்குவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவ்வழியே கடந்து செல்கின்றனர். எனவே உயிர் பலி ஏற்படும் வகையில் உள்ள ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரியின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி