ஆப்நகரம்

துரை வைகோ மீது அப்சட்; காலியான காஞ்சி மதிமுக கூடாரம்!

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் மதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி, தனது முகநூல் பக்கத்தில் தான் கடந்த 28 ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால், இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழி விடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை கழகத்திற்கு தெரிவித்து இருந்தார். இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரை அலைபேசியில் பேசி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டு, மதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைபக்கத்தில் அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 1 Oct 2022, 6:22 pm

ஹைலைட்ஸ்:

  • காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட செயலாளர் ராஜினாமா
  • காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோ மீது அதிருப்தி
  • தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாக அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil durai vaiko
திராவிட முன்னேற்றக் கழகத்திடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1993 ல் வைகோ எனும் வை. கோபால்சாமி தனது ஆதரவாளருடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியினை துவக்கினார். அதற்கான கொடியினை அறிமுகம் செய்து பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வந்தார்.
தற்போது தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது மகனான துரை வைகோவை தலைமை கழக நிலைய செயலாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நியமித்தார். இதன்பின் வைகோவின் மகன், துரை வைகோவின் செயல்பாடுகள், பேச்சுகள் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட மதிமுக கூட்டத்தில் துரை வைகோ பேசிய போது; வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம். இதில் விருப்பம் இல்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது என கூறியது கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களிடையே மிகுந்த சர்ச்சைக்களையும், அதிர்வலைகளையும் உண்டாக்கியது.

முதல்வர் நிகழ்சியில் முதல் வரிசையில் சர்ச்சை எம்எல்ஏ.. இவரையா போலீஸ் தேடுது?

இதனை தொடர்ந்து மதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி, தனது முகநூல் பக்கத்தில் தான் கடந்த 28 ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால், இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழி விடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை கழகத்திற்கு தெரிவித்து இருந்தார்.

இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரை அலைபேசியில் பேசி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டு, மதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைபக்கத்தில் அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கு மாநில துணை பொதுச் செயலாளர் மு. ராஜேந்திரன் என்பவர், எதிர் பதிலை கண்ணிய குறைவாக பதிவு செய்வதை கண்டித்து மதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாநகரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் இன்று மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மகன் திருமண சர்ச்சை; இபிஎஸ் விமர்சனத்திற்கு லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மூர்த்தி!

அதன் பின் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டித்து தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாக அறிவித்தனர். இந்த ராஜினாமா அறிவிப்பு மதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மதிமுகவின் முக்கிய செயல் மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்கிய நிலையில் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது மதிமுகவிற்கு காஞ்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தொண்டர்கள் நினைக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி