ஆப்நகரம்

Guduvancheri Pregnant Woman Suicide: கூடுவாஞ்சேரியை சூழ்ந்த சோகம் - காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி பெண் தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே 9 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 3 Jul 2022, 1:05 pm

ஹைலைட்ஸ்:

  • கூடுவாஞ்சேரி அருகே கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை
  • காதல் கணவன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால் விபரீதம்
  • உடலை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Guduvancheri Pregnant Woman Death
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (21). இவரது மனைவி கோடீஸ்வரி (21). ஒருவரை ஒருவர் காதலித்து வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
சஞ்சய் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கோடீஸ்வரி 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சஞ்சய்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து மனைவி கோடீஸ்வரியிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார்.

அதனால் மனம் உடைந்த கோடீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து கூடுவாஞ்சேரி காவல்துறையினருக்கு இந்த தற்கொலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி