ஆப்நகரம்

ஆதினத்துக்கு அண்ணாமலை ஆதரவு: மனிதனை மனிதன் சுமப்பதா? விளாசும் சீமான்!

மனிதனை மனிதன் சுமப்பது இழிவு இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 5 May 2022, 6:04 pm

ஹைலைட்ஸ்:

  • மனிதனை மனிதன் சுமக்க வேண்டும் என சொல்வது மாண்பு கிடையாது
  • இது பெரும் மதிப்புக்குரியவர்கள் செய்யும் செயலாக இருக்காது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சீமான்
சென்னை தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மனிதனை மனிதன் சுமப்பது இழிவு இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த காலத்தில் வாகனங்கள் வசதி இல்லாத காரணத்தினால் தோளில் தூக்கிக் கொண்டு சென்றார்கள். இன்றைய காலகட்டங்களில் நவீன வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. பட்டினப்பிரவேசம் என்பதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மறுபடி மறுபடியும் சமஸ்கிருதம் என்கின்ற சொல்லைப் பிடித்துக் தொங்கி கொண்டிருக்கிறோம்.

பாஜக மாநில தலைவர் மனைவியிடம் நகை மோசடி... தோழிக்கு வலை வீச்சு!
சமஸ்கிரதத்தில் உறுதிமொழியை எடுக்கிறார்கள், சமஸ்கிருதத்தை படி என சொல்கிறார்கள், இது பெரும் சிக்கலாக உள்ளது. இந்த காலத்துலயும் மனிதனை மனிதன் சுமக்க வேண்டும் என சொல்வது மாண்பு கிடையாது. இது பெரும் மதிப்புக்குரியவர்கள் செய்யும் செயலாக இருக்காது. மதுரை ஆதினம் அல்லது குன்றத்தூர் ஆதீனம் யாராவது பல்லாக்கில் போகிறார்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி