ஆப்நகரம்

குமரியில் கொழிக்கும் கஞ்சா பிஸினஸ்... மேலும் மூன்று இளைஞர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை களைகட்டி உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் கைது ஆகி வருகின்றனர்.

Samayam Tamil 17 Sep 2020, 3:48 pm
நாகர்கோவில் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil கஞ்சா


கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை களைகட்டி உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் கைது ஆகி வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையம், கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போலீசார் ரோந்து சென்றார்.

அப்போது ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும் படியாக நின்றவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் அந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பரசுராமன், சார்லெட் மில்டன், மற்றும் ஈஸ்வர மூர்த்தி என்பதும், அவர்களை சோதனை செய்த போது அவர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

தமிழக அரசை எதிர்கொள்ள ரஜினியை துணைக்கு அழைத்த சித்த மருத்துவர்!

உடனே அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி