ஆப்நகரம்

குமரி: பேரூராட்சி தலைவரின் கணவருக்கும், கவுன்சிலரும் வாய் தகராறு - வீடியோ வைரல்

கணபதிபுரம் பேரூராட்சி தலைவரின் கணவருக்கும் கவுன்சிலருக்கும் (Ganapathipuram Municipality Chairman Husband and Councilor Clash) வாய் தகராறு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 14 Aug 2022, 8:05 pm

ஹைலைட்ஸ்:

  • கணபதிபுரம் பேரூராட்சியில் சாலை செட் பண்ணிடும் பணிகள் நடைபெற்று வருகிறது
  • அது தொடர்பாக பேரூராட்சி தலைவரின் கணவரும் கவுன்சிலரும் ஒருவரருக்கொருவர் வாய் தகராறில் ஈடுபட்டனர்
  • அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Ganapathipuram Viral Video
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணபதிபுரம் பேரூராட்சி உள்ளது. அந்த பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலங்கோட்டை பகுதியில் இருந்து கருணாகுளம் எனும் பகுதி வரை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்து வடிகால் அமைத்து செட் பண்ணிடும் பணிக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது அதற்கான செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தச் சாலையின் மேடான பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கொண்டு செல்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் ஐந்தாவது வார்டு அதிமுக கவுன்சிலர் பூ மதிக்கும் பேரூராட்சி தலைவரின் கணவர் பொன் சுரேஷுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒரு கட்டத்தில் தகராறு முத்திய நிலையில் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகளை அங்கிருந்து சிலர் செல்போன்களில் வீடியோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தலைவராக பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் கணவன் தலையிடுவதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த பேரூராட்சியிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான விவகாரத்தில் தலைவரின் கணவர் தலையிடுவதாக எழுந்த புகாருக்கு இடையே கவுன்சிலரும் பேரூராட்சி தலைவரின் கணவரும் ஒருவருக்கொருவர் வாய் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி