ஆப்நகரம்

காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து விளையாடிகொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jun 2020, 9:25 pm
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சி பகுதியை சார்ந்த ராமசந்திரன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும் நான்காம் வகுப்பு படிக்கின்ற அஞ்சனா என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கலையரசியின் அக்கா கவிதா என்பவர் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட சீதப்பால் சிவன் கோயில் அருகே உள்ளார். இவரின் கணவர் பரமசிவம் என்பவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்நிலையில் கவிதாவின் மகளின் பூப்புனித நீராட்டு விழா கொரோனா ஊரடங்கின் காரணத்தால் நேற்று முன்தினம் சீதப்பாலில் உள்ள வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலையரசியும், மகள் அஞ்சனா, மகன் ஆகியோர் சீதப்பால் வந்துள்ளனர்.

இதையடுத்து, வீட்டின் முன்பகுதியில் உள்ள குறுகிய சந்து பகுதியில் கலையரசியின் மகனான 5 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது வீட்டின் முன்பகுதி காம்பவுண்டு சுவரானது திடீர் என்று இடிந்து விழுந்தது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் இடிபாட்டில் சிக்கிய சிறுவன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். சுவர் விழுந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது சிறுவன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சிறுவனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்ம பக்கம் 100 பேர்... சீனா பக்கம் 350 பேர்: ராணுவ வீரர் பழனிக்கு விழுந்த முதல் அடி!

மேலும் இது பற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி