ஆப்நகரம்

கன்னியாகுமரி ரேஷன் கடையில் ஊழல் - பயனாளி செய்த சிறப்பான சம்பவம்

அருமனை அருகே மேலத்தெரு நியாயவிலை கடை ஒன்றில் எடை குறைவாக ரேஷன் அரிசி வழங்குவதை நிரூபிக்க பயனாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 11 Feb 2023, 3:45 pm
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மேல தெரு பகுதியில் நியாய விலை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு எப்போதும் போல பயனாளிகள் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
Samayam Tamil Arumanai ration shop scam


அப்போது பயனாளி ஒருவர் அந்த நியாய விலை கடையில் அரிசி வாங்க சென்றுள்ளார். அதற்காக ஸ்மார்ட் கார்டு கொடுத்து பதிவு செய்து அரிசி வாங்கியபோது அரிசியின் எடை குறைவாக இருந்துள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தில் பின் தொடரவும்

அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பேனாளி சந்தேகத்துடன் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் இது எத்தனை கிலோ உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு உள்ளே இருக்கும் பெண் ஊழியர் 20 கிலோ என பதில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த பயனாளிக்கு சந்தேகம் குறையாததால் உடனடியாக அவர் வாங்கிய அரிசியை சாக்கு மூட்டையோடு உள்ளே அவர்கள் எடை போட்டு வழங்கிய எடை மெஷினில் தூக்கி வைத்து எடை போட்டு பார்த்துள்ளார். அப்போது அதில் 11 கிலோ அரிசி இருப்பதாக காண்பித்துள்ளது.

இதனை அடுத்து அதே பயனாளி காலி சாக்கு பையில் எடை போக அதில் எத்தனை கிலோ இருக்கும் என அந்த பெண் ஊழியரை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பெண் ஊழியர் பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்த படி அமர்ந்திருந்தார்.

பின்னர் அந்த பயனாளி கடையில் மக்கள் பார்வைக்கு எடை இயந்திரம் வைக்கப்படவில்லை எனவும், கடையில் பணிபுரிபவர்கள் பார்வைக்கு மட்டும் எடை இயந்திரம் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அரிசியின் எடையை குறைத்து வழங்கி மீதம் வரும் அரிசிகளை கடத்தல் தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு வழங்கி அதிக லாபம் ஈட்டி வருவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதோடு அந்த நபர் அதனை செல்போனில் வீடியோ பதிவும் செய்து வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து தங்கிருந்த மக்கள், அந்த நியாய விலை கடையில் இருந்து அரிசி மற்றும் பொருட்கள் ஆனது புரோக்கர்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி