ஆப்நகரம்

ஒரே நாளில் 35 குழந்தைகள்.. மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் நியூஸ்!

ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை பார்த்து மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

Samayam Tamil 29 Jan 2022, 4:48 pm
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை



அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

ஆடிப்போய் கிடக்கும் அதிமுக; பீதி கிளப்பிய டெல்லி உத்தரவு!

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் இந்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்துள்ளதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திர பாபு டென்ஷன்; போலீசுக்கு பறந்தது திடீர் உத்தரவு!

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் களப்பணியாளர்கள் மூலமாகவும், சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலமாகவும் நேற்று 4299 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஒரே நாளில் 605 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 298 பேர் ஆண்கள், 307 பேர் பெண்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

அசிங்கப்படுத்திய அமைச்சர்.. வெடிக்கும் விடுதலை சிறுத்தைகள்!

இவர்களில் நெல்லையில் இருந்து வந்த 8 பேர், கேரளாவில் இருந்து வந்த 2 பேர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 991 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நோயாளிகள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி