ஆப்நகரம்

மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மகா சிவராத்திரி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மார்ச் 1 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 28 Feb 2022, 2:19 pm
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில் விழாக்களில் மிகவும் முக்கியமானது சிவாலய ஓட்டம். மகாசிவ ராத்திரி அன்று 12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவுக்குட்பட்ட பன்னிரென்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது. இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே இந்த ஓட்டமானது நடைபெறுகிறது.
Samayam Tamil maha shivratri school holiday


1.திருமலை சூலப்பாணிதேவர்

2.திக்குறிச்சி மஹாதேவர்

3.திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்

4.திருநந்திக்கரை நந்தீஷ்வரர்

5.பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்

6.பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்

7. கல்குளம் நீலகண்டர்

8. மேலாங்கோடு காலகாலர்

9. திருவிடைக்கோடு சடையப்பர்

10.திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்

11.திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்

12.திருநட்டாலம் சங்கரநாராயணர்

மகா சிவராத்திரியான நாளை இந்த பண்ணீரு சிவாலய தரிசனத்தின் பின்னர் திருவாட்டர் தேவசத்திற்கு சென்று மூலவர் ஆதிகேசவ பெருமாளையும் தங்கத்திலான சிவலிங்கப் பெருமானையும் தரிசித்து அல்லது சுசீந்திரம் தேவசம் சென்று மூலவர்கள் ஸ்தாணு-மாலையரையம் தரிசித்து ஈசனும் பெருமாளும் லயம் கொண்டிருக்கும் தரிசன அருள் பெற்று தங்களது ஆன்மீக தரிசன பயணத்தை முடித்து கொள்வார்கள்.

சிவராத்திரி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மார்ச் 1 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி