ஆப்நகரம்

கல்வி துறைக்கு வந்தது சிக்கல்; 2 நாளில் 7 அதிகாரி மீது வழக்கு!

போலீசார் 2 நாளில் 7 கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் சூழல் உருவாகி இருப்பதால் தமிழக பள்ளி கல்விதுறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Feb 2022, 3:42 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு மற்றும் கழிவறை தூய்மைப்படுத்தும் பணியில் 7 ஊழியர்கள் கடந்த 35 ஆண்டுகளாக 105 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil காவல் நிலையத்தில் புகார்
காவல் நிலையத்தில் புகார்


இவர்களை பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும், இதுவரை கல்வித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் திக்..திக்.. திக்; பயமுறுத்தும்.. பிரேமலதா வழக்கு!

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து பார்த்துவிட்டு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்றஉத்தரவையும், அரசாணையையும் நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டார் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர். அதன்படி கல்வி அதிகாரிகள் 7 பேர் மீது மனு ரசீது போடப்பட்டது. ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை.

சென்னை ரயில் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் இன்று கோட்டார் காவல் நிலையத்துக்கு வந்து முறையிட்டனர். இதனையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது கல்வி அதிகாரிகள் மீது 2 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி