ஆப்நகரம்

நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் தொடர் உயிர்ப் பலி: சிக்னல்தான் காரணம் மக்கள் குமுறல்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 22 Apr 2021, 7:17 pm
நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலையத்தில் போதிய சிகுனல் வசதிகள் இல்லாததால் அடிக்கடி உயிர்ப் பலி சம்பவங்கள் நடந்து வருவதா குற்றச்சாட்டு இருந்து வரும் சூழலில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் தொடர் உயிர்ப் பலி: சிக்னல்தான் காரணம் மக்கள் குமுறல்!


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அருகுவிலை பகுதியைச் சேர்ந்தவர் ஃபிரான்சிஸ். இவரது மகன் அணிஷ். வயது 24. இவர் இவர் பள்ளிவிளை பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார்.

இவர் நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலையம் அருகே ரயிலில் அடிப்பட்டு தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என்ற விவரம் தெரியவில்லை.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி!

இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலையத்தில் போதிய சிக்னல் வசதிகள் இல்லாததால் அடிக்கடி உயிர்ப் பலிகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில், இப்போது இளைஞர் ஒருவரின் சடலம் குறிப்பிட இடத்தில் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி