ஆப்நகரம்

தெறிக்க விட்ட ஆளுநர்; என்னை இயக்குவது இவங்க தான்!

என்னை இயக்குவது இவங்க தான் என கூறி, ஆளுநர் தெறிக்கவிட்டுள்ளார்.

Samayam Tamil 2 Mar 2022, 8:31 am
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 85வது சமய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:
Samayam Tamil தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்



மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவில் நான் ஆண்டுதோறும் தவறாமல் கலந்துகொள்ள அன்னை அருள் பாலிக்கிறாள். நான் இங்கு கவர்னராக வரவில்லை. அன்னை பகவதியின் மகளாய் தான் வந்துள்ளேன்.

ஜெயக்குமாருக்கு புதிய ஆப்பு; அப்போ வெளியில் வர முடியாதா?

கொரோனா முற்றிலும் தீரவில்லை. கொரோனா தீரும் வரை அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இது தற்காப்பு தான். தற்போது, இந்தியாவில் 160 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஐதராபாத் பாரத் பயோடெக் விஞ்ஞானிகள் ஊக்கம் அளித்தனர். அதனால் தான் இந்த குறுகிய காலத்தில் இந்தியாவால் இவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடிந்தது.

சதுரகிரி.. விடிய விடிய அபிஷேகம்; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி சொல்கிறேன். மாநில அரசுகளும் தடுப்பூசியை மக்களுக்கு எடுத்து செல்கின்றன.

வெளிநாடுகளில் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டால் கை குலுக்கி கொள்வார்கள். நம் நாட்டில் கும்பிட்டு வணக்கம் சொல்வோம். இந்த பண்பாடு தானாகவே கொரோனா பரவலை தடுக்கிறது.

கலந்தாய்வில் புதிய ஆப்பு?; பள்ளி ஆசிரியர்கள் ஷாக்!

இந்தியாவின் இந்த பண்பாடு உலகிலேயே சிறந்த பண்பாடாக உள்ளது. இந்த சிறந்த பண்பாடை தான் இந்தியா கொரோனா காலத்தில் உலகத்துக்கே கற்று கொடுத்துள்ளது.

நான் தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரியில் துணை நிலை ஆளுனராகவும் அரசின் கடமைகளை செய்வது பகவதியன்னையின் அருளால் தான். நான் அரசு கடமையை செய்வதற்கு அன்னை எனக்கு அருளிய சக்தியே ஆகும். அன்னையின் சக்தியால் தான் நான் இயங்குகிறேன்.

நெல்லை மாணவி புதிய சாதனை; தமிழகத்துக்கு கிடைத்த பெருமை!

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். இதன் பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

உக்ரைனில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள தெலுங்கானா, புதுச்சேரி மாணவர்களை மீட்க மத்திய அரசு வெளியுறவுத்துறைவுடன் தொடர்பில் இருந்து தான் வருகிறது. உலக நாட்டு அதிபர்களுடன் நமது பிரதமருக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

மாணவர்கள் பத்திரமாக விமானம் மூலம் ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களை பத்திரமாக அழைத்து வருவது அரசின் கடமை. இவ்வாறு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

அடுத்த செய்தி