ஆப்நகரம்

சீசன் தொடங்கியதால் களைகட்டும் ரம்புட்டான் வியாபாரம்!

குமரி மாவட்ட சந்தைகளில் ரம்புட்டான் பழ வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

Samayam Tamil 29 Jul 2020, 7:13 pm

கன்னியாகுமரி மாவட்டம் மலோயோர பகுதிகளில் ரம்புட்டான் பழங்கள் சீசன் துவங்கியுள்ளது. இதனால், சந்தைகளில் ரம்புட்டான் பழம் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
Samayam Tamil ரம்புட்டான் பழம்




மலேசியாவின் பிறப்பிடத்தை கொண்ட ரம்புட்டான் பழமானது அடர்ந்த இலைகளுடன் வளரும் ரம்புட்டான் மரங்களில் கணப்படும். பழத்தின் மேற்பகுதியில் மிருதுவான முட்களுடன் ரம்புட்டான் பழங்கள் விளைகின்றன.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளான மாறாமலை, பாலமோர், சுருளக்கோடு உள்ளிட்ட இடங்களில் தனியார் தோட்டங்களில் ரம்புட்டான் மரங்கள் காணப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் இந்த பழங்களின் சீசன் காணப்படுகிறது. தற்போது பழக்கடைகளில் ரம்புட்டான் வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

15 வயசு சிறுமி பலநாள் பலாத்காரம்... எக்ஸ் எம்எல்ஏ அட்டூழியம்..!

கடைகளில் ரம்புட்டான் பழமானது கூழன், வருக்கை என பிரிக்கப்பட்டு கூழன் ஒரு கிலோவுக்கு 150 ரூபாயும், வருக்கை பழங்களுக்கு 250 ரூபாயுமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழங்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வங்கிச் செல்கின்றனர்.

அடுத்த செய்தி