ஆப்நகரம்

பொதுமக்கள் திடீர் முடிவு.. ஆச்சரியத்தில் போலீஸ்!

முழு ஊரடங்கு தினத்தில் பொதுமக்கள் எடுத்த முடிவு போலீசாரை ஆச்சரியத்தில் மூழ்க செய்துள்ளது.

Samayam Tamil 23 Jan 2022, 11:53 am
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகளில் ஒவ்வொரு வாரமும் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
Samayam Tamil சாலை வெறிச்சோடி உள்ளது
சாலை வெறிச்சோடி உள்ளது



அந்த வகையில் 9ம் தேதி முதல் இன்று மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழக-கேரள எல்லை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் ஆரல்வாய்மொழி வரை சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம் புதிய வியூகம்; அதிமுகவில் திடீர் உற்சாகம்!

சுமார் 600 க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்தும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்கள் அனைத்து இடங்களும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பள்ளிக்கு வர திடீர் உத்தரவு; ஷாக்கான மாணவ, மாணவிகள்!

மக்களே முன்வந்து தங்களுடைய கடைகளை அடைத்து முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.

ராக்கெட் ராஜா திடீர் ஏவுகணை; சிறையில் கர்ஜித்த ஹரி நாடார்!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று முழு ஊரடங்கு முன்னிட்டு நேற்றே சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இன்றும் தடை அமுலில் உள்ளது. இதனால் சுற்றுலா படகுகள் இயக்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி