ஆப்நகரம்

பெருச்சாளியை பிடிக்க முயன்ற பாம்புக்கு நேர்ந்த கதியை பாருங்க!

நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை குடியிருப்பு பகுதியில் தென்பட்ட அனலி பாம்பை பிடித்து வனத்துறையினர் காட்டில் விட்டனர்.

Samayam Tamil 27 Jul 2021, 6:55 pm

ஹைலைட்ஸ்:

  • குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அனலி பாம்பு.
  • பெருசாளியை பிடிக்க போய் பள்ளத்தில் சிக்கியது.
  • வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பெருச்சாளி, பாம்பு
பெருச்சாளியை பிடிக்க போய் பள்ளத்தில் சிக்கிய பாம்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை முத்தாரம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிட பணி நடைபெற்று வருகிறது அங்கு அஸ்திவாரம் தோண்டிய பள்ளத்தில் பெருச்சாளி மாட்டியது.
அதை உணவுக்காக பிடிக்க பள்ளத்தில் இறங்கிய இரண்டு அடி நீள அனலி பாம்பு 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கியது.

அங்கிருந்து வெளியேற முடியாமல் பாம்பு தவித்து வந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தையை கொடுத்துவிட்டு எல்கேப்பான கணவர்... ரெண்டு பிள்ளைகளுடன் தவிக்கும் இளம்பெண்!

அதனை தொடர்ந்து அங்கு வந்த வனத் துறையினர் லாவகமாக அனலி பாம்பை பிடித்து சென்று அடர்ந்த காட்டில் விட்டனர்.

குடியிருப்பு பகுதியில் கொடிய விஷமுள்ள அனலி பாம்பு நுழைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி