ஆப்நகரம்

ராமர் கோயில்: கன்னியாகுமரியில் இருந்து அயோத்திக்கு சென்ற மண், புனித நீர்!!

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலுக்கு, புனிதஸ்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித தீர்த்தம் மற்றும் மண் எடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது.

Samayam Tamil 29 Jul 2020, 9:01 pm
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
Samayam Tamil ram temple


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக நாட்டின் முக்கிய புனித ஸ்தலங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டுவரப்பட்டு அடிக்கல் நாட்டும் இடத்தில் தெளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் தென்கோடி முனையும், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியின் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித தீர்த்தம் மற்றும் மண் எடுக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு அயோதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடல் சீற்றம்..! மீனவர்கள் உயிர் தப்பும் காட்சிகள்...

இதற்கான நிகழ்ச்சி, கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஸ்வ இந்து பரிஷத், பாஜக, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி