ஆப்நகரம்

கிரிக்கெட் விளையாடிய சிறுவனை கடலலை இழுத்துச் சென்ற பரிதாபம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு புதூர் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை ராட்சத அலை இழுத்து சென்றது. அந்த சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 29 Sep 2020, 10:57 pm
மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய ராபின். இவரது மகன் 10 வயதான ரோகித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil sea


இந்த நிலையில், இன்று சிறுவன் ரோகித் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் வீட்டு அருகே உள்ள கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலை எதிர்பாராதவிதமாக ரோஹித்தை இழுத்துச் சென்றது. இதைக்கண்டு இவரோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறியதைத் தொடர்ந்து அப்பகுதியினர் விரைந்து வந்து ரோஹித்தை மீட்க முயற்சித்தனர்.

கன்னியாகுமரிக்கு வந்த புதிய டெக்னாலஜியில் உருவான சொகுசு படகு!

ஆனால், கடலலை இழுத்துச் சென்றதால் ரோஹித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது ஊர்மக்களும் கடலோர காவல் குழுமத்தைச் சேர்ந்த போலீசாரும் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி