ஆப்நகரம்

பதவியில் ஒன்றும் செய்யவில்லை... இப்போது என்ன? பொன்னாரை விளாசும் விஜய் வசந்த்

தமிழக அரசு பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்குவது என்பது சாதாரணமானது. ​​அதனை விமர்சிப்பவர்கள் உங்களைப் பற்றியும் தமிழகத்தை பற்றியும் தெரியாதவர்கள்

Samayam Tamil 27 Dec 2020, 1:07 pm
பதவியில் இருந்தபோது, மீனவர்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் விதமாக திட்டங்களை செயல்படுத்திவிட்டு, தேர்தல் வருவதால் இப்போது மக்களை திசை திருப்புவதற்காக அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கூறுகிறார் பொன்னார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Samayam Tamil விஜய் வசந்த்


சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது " தமிழக அரசு பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்குவது என்பது சாதாரணமானது. அதனை விமர்சிப்பவர்கள் உங்களைப் பற்றியும் தமிழகத்தை பற்றியும் தெரியாதவர்கள் ஆகத்தான் இருக்க முடியும். அரசியலுக்காக இதனை குறை கூறுவது சரியல்ல” என்று பேசினார்.

மேலும், “மத்திய அரசை பொறுத்தவரை விவசாயிகள் ரோட்டிலும் வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியால் தெருவிலும் போராடி வருகின்றனர். அதிலும் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது. டெல்லியில் தொடர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில் பலர் உயிரிழந்துள்ளனர்.

தளபதி என்றால் விஜய் நினைவு வரும்... ஸ்டாலின் என்று சொல்லுங்கள்

ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்து ஒப்பந்தங்களை போட்டு பணம் கை மாறியுள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தான் பதவியில் இருந்த போது பொது மக்களுக்கு விரோதமான திட்டங்களை கொண்டு வந்துவிட்டு இப்போது மக்களை திசை திருப்புவதற்காக நான் இருந்தால் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கூறுகிறார். கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இப்போது இடைத் தேர்தலை கணக்கில் வைத்து அவர் பேசுகிறார் என கூறினார்.

அடுத்த செய்தி