ஆப்நகரம்

கஞ்சா விற்ற இளைஞர்; குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்!

கஞ்சா கடத்தி விற்பனை செய்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 27 Jan 2022, 6:28 pm

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, கள்ளச் சாராயம், உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் அதிமுகவுக்கு நோ; திமுகவுக்கு யெஸ்… நகர்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறு!
கரூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதும், கஞ்சா விற்பனை செய்வதில் பலரும் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் தவறான வழிக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக, கரூர் மாவட்ட போலீஸார், கரூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களையும், கஞ்சா விற்பனை செய்பவர்களையும் தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுக்க கஞ்சா கடத்தலில் ஈடுபவர்களை கண்காணிக்க, தனிப்படை போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் காதலால் பலருக்கு இரையான +1 மாணவி… சினிமாவை விஞ்சும் பரபரப்பு சம்பவம்!
அந்த வகையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரவக்குறிச்சி அருகே உள்ள புதுசீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் திவாகர் (25) என்ற இளைஞரை கரூர் நகர காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அந்த இளைஞரிடம் இருந்த 2.150 கிலோ அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை செய்ததாக, அந்த இளைஞரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி