ஆப்நகரம்

ஓட்டுப் போட்ட 91 வயது மூதாட்டி: கரூர் கலெக்டர் நெகிழ வைத்தார்!

தள்ளாத வயதிலும் வாக்களிக்க ஆர்வம் காட்டி நேரில் வந்த 91வயது மூதாட்டிக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2021, 7:49 pm
கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு எக்குவடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரசாந்த் மு வடநேரே, வாக்குப்பதிவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Samayam Tamil ஓட்டுப் போட்ட 91 வயது மூதாட்டி: கரூர் கலெக்டர் நெகிழ வைத்தார்!


அப்போது கரூர் எஸ்பி காலணியைச் சேர்ந்த ஞானாம்பாள் என்ற 91 வயது மூதாட்டி ஒருவரை அவரது உறவினர்கள் இரு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தார்கள்.

அந்த மூதாட்டியைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவரிடம் சென்று, “இந்த வயதிலும் வாக்களிக்க ஆர்வமுடன் வருகை தந்து இருக்கின்றீர்களே உங்களுக்கு என்ன வயது ஆகிறது?” எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த அந்த மூதாட்டி “எனக்கு 91 வயது ஆகிறது. அனைத்து தேர்தலிலும் தவறாமல் நேரில் வந்து வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். எப்போதும் நடந்து வந்து வாக்களிப்பேன். இந்த முறை வயது முதிர்வு காரணமாக நடக்க முடியவில்லை. இதனால் சக்கர நாற்காலியில் என்னை அழைத்து வந்துள்ளார்கள்” என்றார்.

கரூர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பணப்பட்டுவாடா: 2 லட்சம் சிக்கியது!

இந்த மூதாட்டி தனது வாக்கைப் பதிவு செய்ய வீட்டில் அடம்பிடித்து உறவினர்களை வாக்குச்சாவடிக்குக் கூட்டி வரச் செய்துள்ளார். இதைக் கேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் “அனைத்து வாக்காளர்களுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணமாகத் திகழ்கின்றீர்கள்

இந்தத் தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்ற ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் வருகை தந்தமைக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை வரவழைத்தது.

அடுத்த செய்தி