ஆப்நகரம்

உயிர் வாழனும்னா இதை செய்யுங்க; கொரோனாவுக்கு தீர்வு!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மூலிகை ஆவி பிடிக்கும் இலவச மையம் திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2021, 4:18 pm
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயின் பிடியில் சிக்கி அல்லபட்டு வருகின்றனர்.
Samayam Tamil இலவசமாக ஆவி பிடிக்கின்றனர்
இலவசமாக ஆவி பிடிக்கின்றனர்


இதற்கு, தீர்வாக ஆவி பிடிப்பதன் மூலம் கொரோனா நோயில் இருந்து பூரண குணம் அடையலாம் என மருத்துவர்கள் தற்போது அறிவுறுத்தி வருகின்றனர். அதனால் ஆவி பிடிக்கும் முறையை பொதுமக்கள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். இதில் நல்ல பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச ஆவி பிடிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது மஞ்சள், சுக்கு, மிளகு, வெற்றிலை, கற்பூரவல்லி போன்ற மூலிகைப் பொருட்களை குக்கர் வழியாக கொதிக்க வைக்கின்றனர். பின்னர் அதில் இருந்து வரும் நீராவியை பைப் லைன்கள் மூலம் பிடிக்கும் வகையில் கேட்வாலுடன் நீராவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை; பின்னணியில் இவ்வளவு விஷயம் இருக்கா?

இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து ஆவி பிடித்து செல்கின்றனர். இந்த அமைப்பிற்கு 15,000 முதல் செலவாகும் என்றும் தினசரி ஆயிரம் ரூபாய் முதல் சிலிண்டர் மூலிகை பொருட்களும் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

சொன்னதை செய்த திமுக; மக்கள் வயிற்றில்‘பால்’

எனவே இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தன்னார்வலர்கள் நோய் தொற்றை தடுக்கும் வகையில் இது போன்ற நீராவி மையங்களை திறந்து நோயின் தீவிரத்தை குறைக்க வேண்டும் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த செய்தி