ஆப்நகரம்

விருந்தாளியை வீட்டில் சேர்க்க மறுப்பு; கொரோனா நேரத்துல இது வேறயா?

கரூர் மாவட்டம், வெள்ளைதரை பகுதியில் கொரோனா நேரத்தில் வந்த அழையா விருந்தாளியை வீட்டில் சேர்க்க மறுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 18 May 2021, 10:07 am
நாடு முழுவது கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் பொதுமக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உறவினர் வீடுகளுக்கு செல்ல கூட முடியாமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம், வெள்ளைதரை பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரது வீட்டுக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் பாம்பு வீட்டிற்குள் பதுங்கிவிட்டது. அப்பகுதி மக்கள் வீடு முழுவதும் தேடி பார்த்துவிட்டு, எங்கோ சென்றுவிட்டது. பயப்படாமல் இருங்கள் எனக்கூறினர்.

இதனை ஏற்காத அரவிந்த் குடும்பத்தினர் பாம்பு எங்கேயும் போகவில்லை. வீட்டிற்குள் தான் இருக்கிறது. அதை விரட்டினால் தான் எங்களால் நிம்மதியாக வீட்டிற்குள் செல்ல முடியும் என தெளிவாக கூறிவிட்டனர்.

பொங்கி எழுந்த சுயேச்சை எம்எல்ஏ; ‘பாஜக தலைவர் வெற்று அறிக்கை’

இதையடுத்து வேறு வழியில்லாமல் பொதுமக்கள் வீடு முழுவதும் அலசி ஆராய்ந்து பாம்பை கண்டுபிடித்தனர். அந்த பாம்பு கடுமையாக போக்கு காட்டியபடி, கடிக்கும் வகையில் சீறி பயமுறுத்தி கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அங்கு இங்குமாக அலைந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் அரவிந்த் வீட்டிற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் போக்கு காட்டிய பாம்பை நவீன கருவி மூலம் பிடித்து சாக்கு பைக்குள் போட்டு வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி