ஆப்நகரம்

கரூர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பணப்பட்டுவாடா: 2 லட்சம் சிக்கியது!

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் மீது தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 5 Apr 2021, 11:43 pm
கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் என்பவர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தாக பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil கரூர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பணப்பட்டுவாடா: 2 லட்சம் சிக்கியது!


இதையடுத்து தகவலறிந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கலையரசி மற்றும் குழுவினர் நாகராஜனை நேரில் சென்று கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

அப்போது அவரிடமிருந்து வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாயைப் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை சட்டமன்றம் தொகுதி: வாக்குச்சாவடி மையங்களின் நிலை என்ன?

கைப்பற்றப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி