ஆப்நகரம்

முக்கிய அணையில் தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!

கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 23 Apr 2021, 9:33 am
கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக அமராவதி அணை பயன்பட்டு வருகிறது. கடந்த 6 மாதமாக அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் மேலாக இருப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 553 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
Samayam Tamil அமராவதி அணை
அமராவதி அணை


2 சப்.இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா!

கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பயிர்கள் காயும் நிலையில் உள்ளது. மேலும் அமராவதி ஆற்றின் நீர் நிலைகளில் தண்ணீர் சுத்தமாக வற்றி வருகிறது. இதனால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அமராவதி அணையில் இருந்து ஆற்றிற்கு 1500 கனஅடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

ஒரே மாவட்டத்தில் ஒரு நாளில் 7 பேர் பலி; மக்கள் அச்சம்!

நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84.03 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றிற்கு 1500கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தற்போது 3516.69 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி